Moive: Siraisalai
Music: Ilayaraja
Singers: K.S.Chitra,S.P.Balasubramanyam
F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி
M: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...
F: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..
M: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)
F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி
M: கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ...ஹோய்
F: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ....ஹோய்
M: காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே
F: தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
M: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே (ஆலோலம்)
F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி
F: கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ..ஹோய்
M: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ...ஹோய்
F: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
M: நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்கு தாய்தானோ
F: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா நம் காதல் குறுந்தொகையா (ஆற்றில்)
M: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...
F: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..
M: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ.
F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி
சௌமியா மிக்க நன்றி. இந்த பாடலின் வரிகளை வெகு நாட்களாக தேடி கொண்டிருந்தேன். இந்த பாடலில் ததும்பும் இளமையை நான் பாடி பதிவு செய்ய நீண்ட நாள் ஆசை. எனக்கு பிடித்தவர் பாடகியாக வேண்டுமென்றும் ஆசை. பாடகிக்கு வரிகள் தெரியவில்லை. இன்று கிடைத்து விட்டது. நன்றி நன்றி நன்றி. இந்த வரிகளை என் வலை பதிவில் பதிக்க வேண்டுகிறேன். உங்கள் அனுமதி வேண்டும்.
ReplyDeleteHmm varigalai ezhuthiyavar ku illatha thadukkum urimai, pathivai ittavarkku ! Vedikkaiyaga illai :D
ReplyDeleteVazhthukkal :)