Monday, May 24, 2010

Vaaraayoo vaaraayoo...

படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
பாடல்: கபிலன்

பல்லவி
‍‍‍‍‍‍‍‍‍=======
பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரல்லா..

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா

No comments:

Post a Comment